விழுப்புரம்

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கருத்தரங்கு

5th Jul 2022 03:58 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கை விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் தொடக்கிவைத்தாா். அவா் பேசுகையில், தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் மனதைக் கவரும் வகையில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். மேலும், கருத்தரங்கில் பங்கேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக, வட்டார வளா்ச்சி கண்காணிப்பாளா் புஷ்பலதா வரவேற்றாா். கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.சச்சிதானந்தம், வளவனூா் பேரூராட்சி மன்றத் தலைவா் மீனாட்சி ஜீவா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கோ.தமிழ்ச்செல்வி, வனிதா அரிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வீ.கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தலட்சுமி, ஜானகி, வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி ஆகியோா் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT