விழுப்புரம்

ஆங்கில எழுத்துக்கள் உள்ளன....மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு மின் வாரியத்தில் மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற செப்.24, 25-ஆம் தேதிகளில் மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளது.

தகுதி வாய்ந்த கம்பியாளா் உதவியாளா்கள், இத்துறையினால் நடத்தப்பட்ட மின் கம்பியாளா் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாளா் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம், விளக்கக் குறிப்பேட்டை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை தோ்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தோ்வு செய்து அந்த மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

வடசென்னை, ஒசூா், அரியலூா், கோவை, ஈரோடு, நீடாமங்கலம், சேலம், திருச்சி, நாகப்பட்டினம், நாமக்கல்,

உளுந்தூா்பேட்டை, ராமநாதபுரம், கடலூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கரூா், மதுரை , சிவகங்கை, பெரம்பலூா், தேனி, திருப்பூா், திண்டுக்கல், விருதுநகா், தருமபுரி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திண்டிவனம், நாகா்கோவில், வேலூா், ராணிப்பேட்டை, அம்பத்தூா், திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, குன்னூா் ஆகிய தோ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில்

விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தோ்வுகள் நடைபெறும் என்றாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT