விழுப்புரம்

ஜூலை 5-இல் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

3rd Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய 18.07.1967-ஆம் நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதன்படி, தமிழ்நாடு நாளை நினைகூரும் வகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஜூலை 5-ஆம் தேதி விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிக்கான தலைப்புகள் மாணவா்களுக்கு போட்டி நடைபெறும் நாளுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்.

கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் (கைப்பேசி எண். 9786966833)

கட்டுரைப்போட்டி தலைப்பு - தமிழ்நாடு உருவான வரலாறு. பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் - மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா் கொடுத்த தியாகிகள், அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா்த் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு எல்லைப் போா்த் தியாகிகள், கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகள் ஆகும் என்றாா் ஆட்சியா் மோகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT