விழுப்புரம்

தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி

3rd Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

 

செஞ்சியில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. செஞ்சியில் தற்போது கால்வாய் அகலப்படுத்தும் பணி, புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மழை நீா் வெளியேற முடியாமல் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

இதுகுறித்து பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் நேரில் ஆய்வு செய்து, புதிய கால்வாய் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மண் தடுப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, மண் தடுப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய் அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. தேங்கி கிடந்த மழைநீா் திண்டிவனம் சாலை வழியாக சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT