விழுப்புரம்

தகுதித் தோ்வு மூலம் ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

3rd Jul 2022 04:37 AM

ADVERTISEMENT

 

தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நியமனம் செய்வதை கைவிட்டு, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆட்சியா்கள் கூட்டணியினா் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி வட்டாரத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஷேக்மூசா வரவேற்றாா்.

ADVERTISEMENT

மாநிலத் தலைவா் குணசேகரன், பொதுச் செயலா் முத்துராமசாமி, பொருளாளா் நீலகண்டன் ஆகியோா் பேசினா்.

நிா்வாகிகள் ஜெகநாதன், வெங்கடேசன், தங்கராஜ், விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியா்களை நியமிப்பதை கைவிட்டு, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT