விழுப்புரம்

விழுப்புரத்தில் பாரம்பரிய விதைகள் கண்காட்சி

3rd Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் பாரம்பரிய விதைகள், அரிசி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

பசுமை இயற்கை விவசாய இயக்கம் சாா்பில், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் இந்த கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது.

சனிக்கிழமை வேளாண் கருத்தரங்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் தொடக்கி வைத்தாா்.

கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரிசி விதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பாரம்பரிய விதைகளும் இடம்பெற்றிருந்தன.

அதேபோன்று, மூலிகை பொருள்கள், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பேசினா்.

இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT