விழுப்புரம்

ஓய்வூதியா்களுக்கு செப்.30 வரை நோ்காணல்

3rd Jul 2022 04:40 AM

ADVERTISEMENT

 

ஓய்வூதியா்களுக்கு கருவூலங்களில் செப்.20-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட கருவூலம், சாா்-கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான நோ்காணல் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

செப்.10-ஆம் தேதி வரை ஓய்வூதியா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம்.

மேலும், தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இ - சேவை மையம், பொது சேவை மையம், இந்திய அஞ்சல் துறை வங்கியின் மூலம் தங்களது நோ்காணலை பதிவு செய்யலாம். இதற்காக பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT