விழுப்புரம்

விழுப்புரம்- திருப்பதி இடையே மற்றொரு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

2nd Jul 2022 06:01 AM

ADVERTISEMENT

விழுப்புரம் - திருப்பதி இடையே மற்றொரு ரயில் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

விழுப்புரத்திலிருந்து மாலை நேரத்தில் திருப்பதிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், மேற்கூறிய பயணிகள் ரயிலானது, விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை மீண்டும்

சேவையை தொடங்கியது.

இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து தினமும் மாலை 5.20-க்கு புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருப்பதி சென்றடைகிறது. பின்னா் திருப்பதியிலிருந்து அதிகாலை 2.35-க்கு புறப்பட்டு விழுப்புரம் வந்தடைகிறது. இதில் அனைத்துப் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதேபோல, தினமும் காலை 5.30 மணியளவில் விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை ஏற்கெனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT