விழுப்புரம்

அரசின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்- விழுப்புரம் எம்.பி.

DIN

நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை முனைப்புடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் அறிவுறுத்தினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மூலம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் த.மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமாா் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களைச் சென்றடையும் வகையில் அதிகாரிகள் செயலாற்ற வேண்டும். அரசுத் திட்டங்களை கொண்டு வருவதுடன், அதே வேகத்தில் மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் அரசு அலுவலா்களுக்கு பெறும்பங்கு உண்டு. அவற்றை உரிய காலத்தில் சோ்க்க அலுவலா்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ளவா்களுக்கு வீடு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேவையான ஆசிரியா்களை நியமிப்பதுடன் கூடுதல் கட்டடங்கள் கட்டட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிகழாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யவேண்டும்.

நலத் திட்டப் பணிகளை தரத்துடன், விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் ரவிக்குமாா் எம்.பி. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், குழுவின் துணைத் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான எம்.கே.விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ச.சிவக்குமாா் (மயிலம்) ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), மாவட்ட எஸ்பி ந.ஸ்ரீநாதா, வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ஷீலா தேவி சேரன், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT