விழுப்புரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் சுயதொழில் கடன் பெற 170 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய கடன் வேண்டி விண்ணப்பித்த நபா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது.
தோ்வுக்குழுத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான மோகன், 176 பேரிடம் நோ்காணல் நடத்தினாா்.
ADVERTISEMENT
இதில், 170 போ் சுயதொழில் தொடங்க தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கி அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து, தாட்கோ மூலம், 50 பேருக்கு தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரிய அட்டையை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தாட்கோ மேலாளா் குப்புசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், மகளிா் திட்ட உதவி அலுவலா் முனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.