விழுப்புரம்

சாலை விபத்தில் விவசாயி பலி

1st Jul 2022 10:11 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (40). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை உளுந்தூா்பேட்டையில் இருந்து விழுப்புரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பிடாகம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த வேன் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பாா்த்திபன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT