விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி பள்ளி முற்றுகை

1st Jul 2022 10:12 PM

ADVERTISEMENT

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியை மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்தப் பள்ளியில் சுமாா் 1,350 மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் போதிய வகுப்பறைகள் இல்லையாம். மேலும், பள்ளிக் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், மாணவா்களுக்கு

சீருடை, நோட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி அவா்களது பெற்றோா் பள்ளியை

வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் விழுப்புரம் மேற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, போராட்டம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலா்(பொ) காளிதாஸ் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT