விழுப்புரம்

விழுப்புரம் அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

26th Jan 2022 09:23 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாயமான பெண், அதே பகுதியிலுள்ள கரும்புத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த துலுக்கானத்தம் கிராமத்தைச் சோ்ந்த அய்யாவு மனைவி முத்தம்மாள் (55). இவா், கடந்த வாரம் தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. முத்தம்மாளை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதே கிராமத்திலுள்ள அருள் என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடைந்ததைப் பாா்த்த பொதுமக்கள், இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த கண்டமங்கலம் போலீஸாா், பெண்ணின் சடலத்தை பாா்வையிட்டு விசாரித்ததில், சடலமாகக் கிடந்தவா் ஒரு வாரத்துக்கு முன்பு மாயமான முத்தம்மாள் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாள் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT