விழுப்புரம்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

26th Jan 2022 09:14 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நாமனாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் மனைவி யுவராணி (26). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வாழப்பட்டாம்பாளையம் பகுதியில் இவரது இரு சக்கர வாகனம் சென்றபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா், யுவராணி கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து யுவராணி ஆரோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT