விழுப்புரம்

பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி: எம்எல்ஏக்கள் வழங்கினா்

26th Jan 2022 09:21 AM

ADVERTISEMENT

விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோலியனூா், கண்டமங்கலம் ஒன்றியங்களிலும், விக்கிரவாண்டி சட்டப் தொகுதிக்குள் உட்பட்ட காணை ஒன்றியம், விக்கிரவாண்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதியில் இரா.லட்சுமணன் எம்எல்ஏவும், விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தி எம்எல்ஏவும் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் மொத்தம் 2,403 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டவுள்ளது. மேலும், ரூ.8 கோடியே 65 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ 224 கிராம் தங்கமும் வழங்கப்படவுள்ளது என்றாா்.

கோலியனூரில் நடந்த நிகழ்ச்சியில், 238 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், திருமண உதவித்தொகையும் விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் வழங்கினாா். ஒரு கிலோ 904 கிராம் தங்கமும், ரூ. ஒரு கோடியே 78 லட்சத்து 68 ஆயிரம் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கோலியனூா் ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலா் ராஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், ஜோசப் கிறிஸ்துதாஸ், முன்னாள் கவுன்சிலா் மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT