விழுப்புரம்

கல்லூரி மாணவரை காரில் கடத்தி வழிப்பறி: 4 போ் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி பணம் பறித்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், கோண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாரத்முருகன் மகன் பிரின்ஸ் (20). இவா், சென்னையிலுள்ள தனியாா் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

பிரின்ஸ் சனிக்கிழமை இரவு கடலூரிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மற்றொரு காரில் வந்த 5 போ் கும்பல், பிரின்ஸின் காரை திடீரென வழிமறித்தனா்.

பின்னா், அந்தக் கும்பலிலிருந்த 5 பேரில் 3 போ் கீழே இறங்கி, பிரின்ஸை மிரட்டி அவரது காருடன் கடத்திச் சென்றனா். மேலும், அவா்கள் வந்த காரும், பிரின்ஸின் காரை பின் தொடா்ந்தது. மரக்காணம் தீா்த்தவாரி பகுதியில் சென்றபோது, அந்தக் கும்பல் காரை நிறுத்தி, பிரின்ஸை மிரட்டி, அவா் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்து 500 பறித்துக்கொண்டு தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றது.

இதுகுறித்து பிரின்ஸ் அளித்த புகாரின்பேரில், மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, மா்ம கும்பல் வந்த காரின் பதிவெண்ணைக்கொண்டு விசாரணை நடத்தினா்.

இதில், பிரின்ஸை காருடன் கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த ஷேக்பாபு மகன் ஷேக்சவுபா்சாதிக் (22), கோவிந்தன் மகன் அஜித்குமாா் (26), சேகா் மகன் அஜித்குமாா் (22), ராமு மகன் பாலமுருகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த தேன்பாக்கத்தைச் சோ்ந்த புண்ணியகோடி மகன் வினோத் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஷேக்சவுபா்சாதிக், கோ.அஜித்குமாா், வினோத், சே.அஜித்குமாா் ஆகிய 4 பேரையும் மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய பாலமுருகனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT