விழுப்புரம்

முழு ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய மக்கள்!

DIN

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காணும் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களையிழந்து, மக்கள் வீடுகளில் முடங்கினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தைத் தவிர பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால், முக்கியச் சாலைகள் வெறிச்சோடின. உணவகங்களில் பொட்டல விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், விழுப்புரம் நகரத்தைப் பொருத்தவரை 90 சதவீத உணவகங்கள் மூடிக் கிடந்தன. ஒரு சில உணவகங்கள் மட்டுமே திறந்திருந்த போதிலும், அவற்றிலும் பெரிய அளவில் வியாபாரம் இல்லை.

வழக்கம் போல, மருந்தகங்கள், பாலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன. எனினும், அங்கும் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டன.

விழுப்புரம் நகரில் முக்கியச் சாலைகளான விழுப்புரம்-திருச்சி சாலை, புதுச்சேரி சாலை, திருக்கோவிலூா் சாலை, சென்னை சாலை ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையும் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் விழா என்றபோதிலும், முற்றிலுமாக அந்த விழா களையிழந்தது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

விதிகளை மீறி தெருக்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றியவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT