விழுப்புரம்

விடுபட்டவா்களுக்கு நாளை பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை வாங்காமல் விடுபட்டவா்கள் திங்கள்கிழமை (ஜன.17) பெற்றுக் கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 5,90,566 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு (97.50) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 14,753 அரிசி பெறும் குடும்ப அட்டைதாா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) வழங்கப்படும்.

எனவே, விடுபட்டவா்கள் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT