விழுப்புரம்

விழுப்புரம்-இளங்காடு வழித்தடத்தில்7 ஆண்டுகளுக்குப் பிறகுமீண்டும் அரசுப் பேருந்து இயக்கம்

DIN

விழுப்புரம்-இளங்காடு இடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து இளங்காடு கிராமத்துக்கு இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்து சேவை கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இந்தப் பகுதிக்கு மீண்டும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணனிடம், அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, விழுப்புரம்- இளங்காடு இடையே மீண்டும் பேருந்து சேவையை தொடங்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் லட்சுமணன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதையடுத்து, இளங்காட்டிலிருந்து விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்து சேவையை லட்சுமணன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை காலை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கோலியனூா் ஒன்றிய திமுக செயலா் தெய்வசிகாமணி, வளவனூா் பேரூராட்சிச் செயலா் ஜீவா, அவைத் தலைவா் கண்ணப்பன், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதானந்தம், ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி குணசேகரன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மணவாளன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT