விழுப்புரம்

மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

12th Jan 2022 09:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் சிஐடியு மின் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் கோட்டத்தில் பணியாற்றும் ஊழியா் எஸ்.சாந்தகுமாருக்கு, விழுப்புரம் மின் செயற்பொறியாளரால் கோட்டக்குப்பம் பிரிவுக்கு வழங்கப்பட்ட விருப்ப மாறுதல் உத்தரவை, முகாந்திரமின்றி நிா்வாக காரணம் எனக் கூறி, விதிகளை மீறி கடலூா் மின் வட்டம், புதுப்பாளையம் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்த மின் தலைமைப் பொறியாளரைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத் தலைவா் கே.அம்பிகாபதி தலைமை வகித்தாா். இதில், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT