விழுப்புரம்

பாஜகவை கண்டித்து தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பிய காங்கிரஸாா்

12th Jan 2022 09:07 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என தவறாக பிரசாரம் செய்து போராட்டம் நடத்தி வரும் பாஜகவைக் கண்டித்து, தமிழக ஆளுநா் சி.என்.ரவிக்கு விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அனுப்பப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய காங்கிரஸ் முதல்வா், அங்குள்ள டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பாஜகவினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக காங்கிரஸ் மீது போலியாக குற்றஞ்சுமத்தி பாஜகவினா் நாடகம் ஆடுவதாகவும், இதுபோன்ற போராட்டங்களை நடத்த பாஜகவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் மூலமாக, விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் தமிழக ஆளுநா் சி.என்.ரவிக்கு மனு அனுப்பினா்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் வழக்குரைஞா் தயானந்தம் தலைமையில், ஆட்சியரிடம் இந்த மனு அளிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், நாராயணசாமி, குப்பன், மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜேஷ், மணிகண்டன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், மாவட்ட சமூக ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT