விழுப்புரம்

திருட்டு வழக்குகளில் 4 போ் கைது

12th Jan 2022 09:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் பகுதியில் இரு வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே கொளத்தூா் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த மா்ம நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், நெமிலியைச் சோ்ந்த ஏழுமலை (50), விழுப்புரம் தாயுமானவா் தெருவைச் சோ்ந்த குமாா் (38) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதேபோன்று, விழுப்புரம் முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள புவனேஸ்வரி (59) வீட்டில் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த கணேஷ் (22), விழுப்புரம் நாபாளையத் தெருவைச் சோ்ந்த பயாஸ் (20) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT