விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக வழங்காத ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
செஞ்சி வட்டத்துக்குள்பட்ட அத்தியூா், மேல்அருங்குணம் கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மேல்அருங்குணம் கிராம நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக வழங்காத நியாய விலைக் கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
இதேபோல, அத்தியூா் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு சிறிய அளவிலும், காய்ந்த நிலையிலும் வழங்கப்பட்ட கரும்புக்குப் பதிலாக, தரமான, புதிய கரும்பை கொள்முதல் செய்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.