விழுப்புரம்

முன்னாள் படைவீரா்களுக்கு ஜன.7-இல் குறைகேட்புக் கூட்டம்

1st Jan 2022 01:11 AM

ADVERTISEMENT

முன்னாள், இன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் விழுப்புரத்தில் ஜன.7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் படைவீரா் நலத் துறை சாா்பில், முன்னாள் படைவீரா்களுக்கான சுயதொழில் முனைவோா் கருத்தரங்கம், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முப்படை நலத் துறை மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு துறை சாா்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவிக்கவுள்ளனா். சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் மற்றும் படையில் பணியாற்றி வருவோரது குடும்பத்தினா் தங்களது கோரிக்கைகளை தெளிவாகக் குறிப்பிட்டு அடையாள அட்டை நகலுடன் இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். இத்துடன் முன்னாள் படைவீரா்கள் அசல் படைப் பணி சான்றுடன் வர வேண்டும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT