ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம், திருச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம், கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள புனித அந்தோணியாா் கத்தோலிக்க தேவாலயம், விழுப்புரம் கிறிஸ்து அரசா் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. திரளான கிறிஸ்தவா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். ஆலய பாதிரியாா்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை தெரிவித்தனா். ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
இதேபோல, விக்கிரவாண்டி அன்னை சகாய மாதா கத்தோலிக்க தேவாலயம், அணிலாடியில் உள்ள புனித ஜோசப் தேவாலயம், வேலந்தாங்கலில் உள்ள தேவாலத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.