விழுப்புரம்

சாலை விபத்தில் பாதிரியாா் பலி

1st Jan 2022 10:51 PM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு திருப்பலிக்கு சென்ற பாதிரியாா், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வேலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் மரியஜோசப் (33). இவா், விழுப்புரம் புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தாா். ஜான்சன் மரியஜோசப் வெள்ளிக்கிழமை நள்ளிரவு விழுப்புரம் புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்புத் திருப்பலியில் பங்கேற்பதற்காக, செஞ்சி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இவரது பைக் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் ஜான்சன் மரியஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த விக்கிரவாண்டி போலீஸாா், பங்குத்தந்தை ஜான்சன் மரியஜோசப்பின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT