விழுப்புரம்

அனந்தபுரம் பேரூராட்சியில் ஒரு வாக்கு கூட பெறாதபாஜக வேட்பாளா்!

22nd Feb 2022 11:10 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 6-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் கோ.நிரோஷா ஒரு வாக்குகூட பெறவில்லை.

அனந்தபுரம் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பேரூராட்சியிலுள்ள 6-ஆவது வாா்டில் மொத்தம் 5 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த வாா்டில் மொத்தமுள்ள 335 வாக்குகளில் 254 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட ர.அக்ஷயா 135 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ச.பத்மா 34 வாக்குகளும், சுயேச்சைகளான ச.மஞ்சுளா 75 வாக்குகளும், தே.ஜீவிதா 11 வாக்குகளும் பெற்றனா்.

பாஜக சாா்பில் போட்டியிட்ட கோ.நிரோஷா ஒரு வாக்குகூட பெறவில்லை. இவா், 10-ஆவது வாா்டை சோ்ந்தவா். கட்சியின் நிா்பந்தத்தால் 6-ஆவது வாா்டில் போட்டியிட்டாா். மேலும், இதே வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்ட மஞ்சுளா தனது உறவினா் என்பதால், நிரோஷா பிரசாரமும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT