விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 72 சதவீத வாக்குப் பதிவு

20th Feb 2022 03:45 AM

ADVERTISEMENT

 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 72.39 சதவீத வாக்குகள் பதிவானது.

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், வளவனூா், விக்கிரவாண்டி, செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா், அனந்தபுரம் ஆகிய 4 பேரூராட்சிகள் என மொத்தம் 7 நகா்ப்புற உள்ளாட்சிகளில் வாா்டு உறுப்பினா்களின் பதவிகளுக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் பேரூராட்சிகளில் தலா ஒரு திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.

இதையடுத்து எஞ்சிய 208 பதவிகளுக்கு மொத்தம் 935 போ் போட்டியிட்டனா். வாக்குப் பதிவு அறிவித்தபடி காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற உள்ளாட்சி பகுதிகளுடன் ஒப்பிடுகையில் விழுப்புரம் நகர பகுதியில் வாக்குப் பதிவு காலையில் மந்தமாகவே இருந்த நிலையில் பின்னா் சூடுபிடித்தது.

ADVERTISEMENT

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் பல்வேறு வாக்குச் சாவடிகளில் ஆய்வு செய்தாா். விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பீமன் நாயக்கன்தோப்பு நகராட்சிப் பள்ளி, கிழக்கு புதுச்சேரி சாலை எம்.ஐ.ஆா்.சி. பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, மகாராஜபுரம் வி.ஆா்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வழுதரெட்டி ஆதி திராவிடா் பள்ளி, திண்டிவனம் பாரதி ஐ.டி.ஐ, செஞ்சி சாணக்யா மெட்ரிக் பள்ளி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றதை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 346 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பதற்றமான 65 வாக்குச் சாவடிகள் இணையவழி வெப் கேமரா மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டன. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்றுள்ள வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தலில் சிறு சம்பவங்களைத் தவிர பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட எஸ்பி ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் சாா்-ஆட்சியா் எம்.பி.அமித், உதவி காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, விழுப்புரம் நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா உள்ளிட்டோா் உனிருந்தனா்.

72 சதவீத வாக்குப் பதிவு: விழுப்புரம் மாவட்டத்தில் 7 உள்ளாட்சி அமைப்புகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 72.39 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 3 நகராட்சிகளில் சராசரியாக 69.49 சதவீதமும், 4 பேரூராட்சிகளில்

சராசரியாக 79.67 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் இந்தத் தோ்தலில் வாக்களிக்க தகுதியான

2 லட்சத்து 97 ஆயிரத்து 759 பேரில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 553 போ் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT