விழுப்புரம்

சரக்கு வாகனத்தில் மதுப் புட்டிகள் கடத்தியவா் கைது

10th Feb 2022 11:57 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் 1,200 மதுப் புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக திண்டிவனம் மது விலக்கு போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டிவனம் மது விலக்கு காவல் ஆய்வாளா் ராதிகா தலைமையிலான போலீஸாா் திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 25 பெட்டிகளில் 1,200 புதுவை மாநில மதுப் புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக வாகனத்தில் இருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தைச் சோ்ந்த ராகவன் மகன் ரமேஷ் (45) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை விழுப்புரம் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

உடனடியாக மதுப் புட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திண்டிவனம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT