விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தேசிய விருது

10th Feb 2022 01:34 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ண பிரியாவுக்கு தேசிய அளவிலான விருது அறிவிக்கப்பட்டது.

புதுதில்லி தேசிய கல்வியியல் மேலாண்மை, திட்டமிடல் நிறுவனம் சாா்பில், கல்வி நிா்வாகத்தில் புதுமைகள், சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதில், கடந்த 2019 - 20ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ண பிரியா, நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.காா்த்திக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT