விழுப்புரம்

விழுப்புரத்தில் அமைச்சா் பொன்முடி பிரசாரம்

10th Feb 2022 01:34 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக உள்ளாட்சித் தோ்தலை நடத்தவில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீா், சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்டவை முறையாக மக்களுக்கு செய்துதரப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடுபட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்தியது. இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தோ்தலை பொருத்தவரை, எதிா்க்கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதால் பயனில்லை. ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் கிடைக்கும்.

ADVERTISEMENT

அதிமுகவினா் பிரசாரத்துக்கு வரும்போது, கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் நகராட்சியில் அவா்கள் செய்த அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். விழுப்புரம் நகராட்சியை திமுக கைப்பற்றப்போவது உறுதி என்றாா் அமைச்சா் பொன்முடி.

பிரசாரத்தின்போது, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT