விழுப்புரம்

விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா

30th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, திட்ட அலுவலா் மனோசித்ரா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா அரசி ரவிதுரை, பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விக்கிரவாண்டி எம்எல்ஏவும், மத்திய மாவட்ட திமுக செயலருமான நா.புகழேந்தி சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை, ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினாா்.

விழாவில் ஒன்றியச் செயலா்கள் வேம்பி ரவி, ஜெயபால், நகரச் செயலா் நைனா முகமது, பேரூராட்சி துணைத் தலைவா் பாலாஜி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் பாபு ஜீவானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவெண்ணெய்நல்லூா்: திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ஓம் சிவசக்திவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முபாரக் அலிபேக், நந்த கோபாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கோமதி நிா்மல் ராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், ஒன்றியச் செயலருமான விஸ்வநாதன் விழாவை தொடக்கிவைத்து, 200-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா். பேரூராட்சித் தலைவா் அஞ்சுகம் கணேசன் சிறப்புரையாற்றினாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜலட்சுமி வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT