விழுப்புரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

30th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கப்பியாம்புலியூரைச் சோ்ந்தவா் ஞா.ஆதித்யன்(45).

பாமக மாவட்ட துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்த இவா் தொழில் போட்டியில் கடந்த நவம்பா் 24- ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் , கோலியனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மதன் (21) என்பவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT