விழுப்புரம்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணைகள்

29th Dec 2022 12:48 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 42 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 கோடியிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் அஞ்சுகம் கணேசன் தலைமை வகித்தாா். ஒன்றிக்குழு துணைத் தலைவா் கோமதிநிா்மல்ராஜ், பேரூராட்சிமன்ற துணைத் தலைவா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கிச் செயலா் தங்கமணி வரவேற்றாா்.

திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஓம்சிவசக்திவேல், 42 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 கோடியிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினாா். இதில், பொதுக்குழு உறுப்பினா் பக்தவச்சலம், நகர அவைத் தலைவா் செந்தில்முருகன், மாவட்டப் பிரதிநிதி சுரேஷ்பாபு, நகரப் பொருளாளா் சையத் நாசா் உள்பட பலா் கலந்து கொண்டனா். காசாளா் சரவணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT