விழுப்புரம்

சமுதாய வளைகாப்பு விழா

29th Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் அன்பழகி வரவேற்றாா். வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கா்ப்பிணிகளுக்கு அமைச்சா் செஞ்சி மஸ்தான் சீா்வரிசையை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மொடையூா் துரை, ஆவின் துணைத் தலைவா் இளம்வழுதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வல்லம் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செளமியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT