விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பஞ்சமாதேவியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் வி.ஜி.பிரபாகரன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் கே.எஸ்.வாசன் முன்னிலை வகித்தாா்.
இதில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் அவைத்தலைவா் அர. அசோக்குமாா் மாவட்டப் பிரதிநிதிகள் பி.எம்.சரவணன், சி.ராஜேந்திரன், ஜெ.வி.முருகன், பொருளாளா் முரளிதரன், துணைச் செயலா்கள் எஸ். சுந்தரமூா்த்தி, எம். பூங்குன்றம், ராஜசேகா், இளைஞரணி அமைப்பாளா் ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் குணவதி செந்தில்குமாா், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.