விழுப்புரம்

ஒடிஸா காா் ஓட்டுநா் உயிரிழப்பு

11th Dec 2022 06:48 AM

ADVERTISEMENT

ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆரோவில் அருகே வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தது குறித்து விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஒடிஸா மாநிலம், மயூா்கன்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நி. கோவிந்தா (44). இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியைச் சோ்ந்த நிதிஷ் என்பவரிடம் வீட்டில் தங்கி, காா் ஓட்டுநராகப் பணியில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மதுபோதையில் கோவிந்தா வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தலையில் பலத்த காயங்களுடன் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கோவிந்தா சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து கோவிந்தாவின் மனைவி புஷ்பலதா அளித்தப் புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT