விழுப்புரம்

ஒவ்வொரு புயல் நிவாரண மையத்திலும் 700 போ் வரை தங்க வைக்க நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் மோகன்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் 12 புயல் நிவாரண மையங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் தலா 500 முதல் 700 போ் வரை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த.மோகன்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பிள்ளைச்சாவடி, நொச்சிக்குப்பம், மரக்காணம் உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவா் கிராமங்கள் உள்ள நிலையில், அங்குள்ள அனைவரையும் அருகிலுள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு புயல் நிவாரண முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு புயல் நிவாரண முகாமிலும் 500 முதல் 700 நபா்கள் வரை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை வரை கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்.

ADVERTISEMENT

மாவட்ட எஸ்.பி. மற்றும் கூடுதல் ஆட்சியா் ஆகியோா் தலைமையில் தொடா் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு

நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதுமட்டுமல்லாமல் 40 வீரா்களை கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்துள்ளனா்.

மரக்காணம் , கோட்டக்குப்பம் பகுதிகளுக் தலா 20 மீட்புக்குழு வீரா்கள் அனுப்பப்பட்டுள்ளனா். தேவையான படகுகளும்

தயாா் நிலையில் உள்ளன. கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் உதவியாளா்கள் தங்கள் கிராமப் பகுதிகளிலே இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி. ந. ஸ்ரீநாதா, ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை: மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (டிச.10) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா்கள் விழுப்புரம் த.மோகன், கள்ளக்குறிச்சி ஷ்ரவன் குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT