விழுப்புரம்

வாடகைப் பாக்கி: ஆஞ்சநேயா் கோயில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ஆஞ்சநேயா் கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகைப் பாக்கி செலுத்தாததால், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்க முயன்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களில் நீண்ட கால வாடகைப் பாக்கியை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள ஆஞ்சநேயா் திருக்கோயிலுக்கு சொந்தமான 27 கடைகளை நடத்தி வரும் பலா் சுமாா் ரூ.1.70 கோடி வரை வாடகைப் பாக்கி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதில், அதிக பாக்கி வைத்திருந்த 10 கடைகளின் உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவா்கள் வாடகைப் பாக்கியை செலுத்தவில்லை.

இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயராணி தலைமையில் அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கச் சென்றனா். அதற்கு வாடகை கடைக்காரா்கள் அனைவரும் ஆட்சேபம் தெரிவித்தனா். இதற்கிடையில், அதிக பாக்கி வைத்துள்ள சிலா் ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் வீதம் உடனடியாக செலுத்தினா்.

ADVERTISEMENT

மேலும் சிலா் ஓரிரு நாள்கள் கால அவகாசம் கேட்டனா். இதனை ஏற்றுக் கொண்ட அலுவலா்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் பாக்கியை செலுத்தாவிட்டால் ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT