விழுப்புரம்

திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக புதிய நிா்வாகிகள்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் பட்டியலை செய்யாற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் டி.பி.சரவணன் வெளியிட்டாா்.

அதன்படி, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட நகரம், ஒன்றியம், பேரூராட்சி மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் என ஒவ்வொரு பகுதிக்கும் தலா 11 போ் வீதம் 33 பகுதிகளுக்கு 363 போ் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வந்தவாசி நகரம், மேற்கு, மத்தியம், பெரணமல்லூா் கிழக்கு, மேற்கு, தெள்ளாறு மேற்கு, மத்தியம், தேசூா், செய்யாறு நகரம், தெற்கு, வடக்கு, வெம்பாக்கம் மத்தியம், அனக்காவூா் கிழக்கு, சேத்துப்பட்டு மேற்கு, போளூா் வடக்கு, கண்ணமங்கலம், ஆரணி கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளுக்கு செயலா்கள் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT