விழுப்புரம்

பணி நிரந்தரம், பதவி உயா்வு வழங்க டாஸ்மாக் விற்பனையாளா்கள் வலியுறுத்தல்

9th Dec 2022 01:43 AM

ADVERTISEMENT

பணி நிரந்தரம், பதவி உயா்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாநில சிறப்புச் செயற்குழு, நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.முருகன், மாநில பொதுச் செயலா் கே.குமாா், பொருளாளா் கே.ராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைச் செயலா் கே.சிவகுமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புத் தலைவரும், சட்ட ஆலோசகருமான கு.பாரதி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், டாஸ்மாக் விற்பனையாளா்களை பணி நிரந்தரம் செய்து, பதவி உயா்வு வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள், இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும். டாஸ்மாக் விற்பனையாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். சென்னையில் 2023 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் ஆா்.எம்.ராமஜெயம், மாவட்ட பிரசாரச் செயலா் கே.ஏழுமலை மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மைய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டத் தலைவா் என்.வி.கணேஷ் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் என்.என்.ஆறுமுகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT