விழுப்புரம்

சிறுவானூரில் ரேஷன் கடை: கட்டடம் கட்ட அடிக்கல்

9th Dec 2022 01:41 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், சிறுவானூா் ஊராட்சியில் ரூ.15.83 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கான கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி முன்னிலை வகித்தாா். விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், உறுப்பினா் பி.வி.ஆா்.விசுவநாதன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம் சிவசக்திவேல், ஊராட்சித் தலைவா் பாரதிமோகன்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முபாரக் அலி, நந்தகோபால கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT