விழுப்புரம்

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

9th Dec 2022 01:41 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், தல்லாபாளையம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் த.ஏழுமலை(49), தொழிலாளி. இவா் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னை கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை தல்லாபாளையத்திலுள்ள இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.10,500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT