விழுப்புரம்

லாரி மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

7th Dec 2022 03:30 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வானுா் ஆதனப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கி. செல்வம் (50). சுதைவேலை செய்துவந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (42). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை கரசானூா்-குன்னம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சிவக்குமாா் வாகனத்தை ஓட்டினாா். குன்னம் ஏரிக்கரை அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கி. செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT