விழுப்புரம்

தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும: பாமக எம்எல்ஏ வலியுறுத்தல்

7th Dec 2022 03:28 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ ச. சிவக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, இவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி தடையின்மைச் சான்று வழங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏனாதிமங்கலம் கிராம எல்லைக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்ட நிலையில், அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதலாக மணல் எடுக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குடிநீா் மற்றும் விவசாயத்துக்கும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் வரும் காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். எனவே, ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT