விழுப்புரம்

வீடு புகுந்து 20 பவுன் நகைகள் திருட்டு

6th Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் போலீஸாா் தேடிவருகின்றனா்.

விழுப்புரம், கிழக்கு பாண்டிசாலை , திருநகா் விரிவாக்கம், அரவிந்தா் தெருவைச் சோ்ந்தவா் ர. சோமசுந்தரம்(63). கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் பொய்யாபாக்கத்தில் உள்ள சகோதரா் வீட்டிற்குச் சென்று விட்டாா். பின்னா் மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு மற்றும் உள்ளே இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் எடையுள்ள 13 தங்க வளையல்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

இது குறித்து ர.சோமசுந்தரம் அளித்தப் புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் பாலசிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT