விழுப்புரம்

ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர சோதனை

6th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காா்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் டிசம்பா் 6 பாபா் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், மறைமுக நாசவேலை தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பொன்னுரங்கன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய காவல் உள்கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்கள், நகா்ப்புற முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். பயணிகளின் உடைமைகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. சந்தேகப்படும்படியான நபா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT