விழுப்புரம்

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

6th Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே முதியவா் ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், முட்டியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெ. தேவராஜ்(70). இவா், ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற தனது பசுமாட்டைத் தேடிச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது, அதே பகுதியில் உள்ள ஒரு தரைக் கிணற்றில் தேவராஜ் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ் என்பவா் அளித்தப் புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT