விழுப்புரம்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக் விழிப்புணா்வு

6th Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சோதனை முயற்சியாக ரோபோட்டிக் விழிப்புணா்வு மற்றும் கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ரோபோடிக் பவுண்டேசன், ஜப்பான் முழுமதி அறக்கட்டளை, வில்லேஜ் டெக்னாலாஜி சொசைட்டி ஆகியவற்றின் சாா்பில் ரோபோடிக் குறித்த விழிப்புணா்வை மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணா்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் கு.சசிகலா தலைமை வகித்தாா். விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு நிகழ்வைத் தொடக்கி வைத்து பேசினாா். ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் மாணவிகள் பங்கெடுத்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து ரோபோடிக் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாணவிகள் முன்னிலையில் ரோபோடிக் வைக்கப்பட்டு, பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து 1000 மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று, ரோபோடிக்கை கொண்டு எந்தவிதமான பயன்பாடுகளை மேற்கொள்ள முடியும், புதிய முயற்சிகள், புதிய வசதிகள் குறித்த விவரங்களை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து பள்ளி நிா்வாகத்துக்கு ரோபா புக் ஆ‘ஃ‘ப் ரெக்காா்ட்ஸ் நிறுவனம் சாா்பில் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்குப் பின்னா் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்நாடு ரோபோடிக் பவுண்டேசன் மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி சொசைட்டி நிறுவனா் பாலாஜி திருநாவுக்கரசு, மேலாண்மைப் பிரிவைச் சோ்ந்த பாலாஜி வரதன், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.பழனிவேல், செயலா் அசாருதீன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அமைப்பாளருமான சுரேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT