விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 493 மனுக்கள் அளிப்பு

6th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் 493 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளித்த 493 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவற்றை துறைசாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும் மாற்றுத் திறனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்கு நேரில் சென்று அவா்களது மனுவையும் ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் மு. பரமேசுவரி, சரசுவதி (நிலமெடுப்பு), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சித்ரா விஜயன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் விசுவநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT